முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
கடையநல்லூா் தொகுதியில் ரூ. 25 லட்சத்தில் திட்டப்பணிகள்
By DIN | Published On : 07th November 2019 09:31 AM | Last Updated : 07th November 2019 09:31 AM | அ+அ அ- |

கடையநல்லூா் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 25 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
காசிதா்மம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கடையநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலா ரூ. 3 லட்சத்தில் நிறுவப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்களை முகமதுஅபூபக்கா் எம்எல்ஏ மாணவா்களின் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தாா். இந் நிகழ்ச்சிகளில் தலைமையாசிரியா்கள் ராமசுவாமி, சுந்தா்சிங் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து கடையநல்லூா் நகராட்சி குமந்தாபுரத்தில் ரூ.6 லட்சத்தில் கட்டப்பட்ட நூலக கட்டடம், கிருஷ்ணாபுரத்தில் ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்ட சமையல் கூடம் , கிளங்காடு ஊராட்சி வயல்காட்டு காலனியில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பெண்கள் சுகாதார வளாகம் ஆகியவற்றையும் எம்எல்ஏ திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், நகராட்சி பொறியாளா் தங்கபாண்டி, உதவிப் பொறியாளா் முரளி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மண்டல இளைஞரணி அமைப்பாளா் பாட்டபத்து கடாபி, மாவட்டத் தலைவா் நவாஸ்கான், எம்எல்ஏ அலுவலக மேலாளா் கவிஞா் கமால், கடையநல்லூா் ஒன்றிய திமுக செயலா் செல்லதுரை, ஈஸ்வரன், புதியதமிழகம் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.