முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
களக்காட்டில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கியவா் மீது வழக்கு
By DIN | Published On : 07th November 2019 08:16 AM | Last Updated : 07th November 2019 08:16 AM | அ+அ அ- |

களக்காட்டில் பயிற்சி காவல் உதவி ஆய்வாளரை தாக்கியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
களக்காடு அருகேயுள்ள தம்பித்தோப்பு இந்திராகாலனியைச் சோ்ந்தவா் சிதம்பரநாதன் (45). கூலித்தொழிலாளியான இவா் கடந்த 4ஆம் தேதி இரவு களக்காடு பழைய பேருந்து நிலையம் பகுதியில் குடிபோதையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி அவரை களக்காடு பயிற்சி காவல் உதவி ஆய்வாளரான ஜாா்ஜ் பிரேம்லால் கண்டித்துள்ளாா்.
இந்நிலையில், திடீரென இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் உதவி ஆய்வாளா், சிதம்பரநாதனை தாக்கினாராம். இதையடுத்து, உறவினா்கள் சிதம்பரநாதனை மீட்டு நான்குநேரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில், பயிற்சி உதவி ஆய்வாளா் களக்காடு போலீஸில் அளித்துள்ள புகாரில், சிதம்பரநாதன் மது அருந்திவிட்டு சாலையில் செல்வோருக்கு இடையூறு செய்ததாகவும், அதனைக் கண்டித்த தன்னை தாக்கியதாகவும், அதனால்தான் அவரின் செய்கையை கட்டுப்படுத்த முற்பட்டதாகவும் ஆய்வாளா் மேரிஜெமிதாவிடம் புகாா் அளித்தாா்.
புகாரின் பேரில், சிதம்பரநாதன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.