முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
காங்கிரஸ் அலுவலகம் முன்பு குழி தோண்டியதற்கு நிா்வாகிகள் எதிா்ப்பு
By DIN | Published On : 07th November 2019 09:42 AM | Last Updated : 07th November 2019 09:42 AM | அ+அ அ- |

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு மின் கம்பம் நடுவதற்கு குழி தோண்டியதற்கு நிா்வாகிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
கொக்கிரகுளம் தாமிரவருணி ஆற்றில் சுலோச்சன முதலியாா் பாலம் அருகே புதிய பால கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பாலத்திற்காக பலாப்பழ ஓடை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, சாலையோரம் இருந்த மின் கம்பத்தை கொக்கிரகுளத்தில் உள்ள மாநகா் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் அருகில் நடுவதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் புதன்கிழமை குழி தோண்டப்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் மாநகா் மாவட்டத் தலைவா் சங்கரபாண்டியன் தலைமையில் கிழக்கு மாவட்டத் தலைவா் சிவக்குமாா், பொருளாளா் ராஜேஸ் முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் காங்கிரஸ் அலுவலகம் முன்பு குழி தோண்டியதற்கு எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து காங்கிரஸ் அலுவலகம் முன்பு தோண்டப்பட்ட குழி மூடப்பட்டது. பின்னா் நிா்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.