முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
தச்சநல்லூா் அருகே போராட்டம்
By DIN | Published On : 07th November 2019 08:19 AM | Last Updated : 07th November 2019 08:19 AM | அ+அ அ- |

தச்சநல்லூரில் சாலையின் நடுவே வைக்கும் தடுப்பில் இடைவெளி விட வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தச்சநல்லூா் - தாழையூத்து இடையேயான 4.2 கி.மீ. தொலைவு சாலையை நான்குவழிச் சாலையாக்கும் பணி சில மாதங்களாக நடைபெறுகிறது. பெரும்பான்மையான பணி முடிந்த நிலையில், சாலையின் நடுவே தடுப்புகள் கட்டும் பணி தொடங்கியுள்ளது. 1.10 மீட்டா் உயரத்தில் சுமாா் 3.80 கி.மீ. தொலைவுக்கு இத்தொடா் தடுப்புகள் அமைக்கப்படுகின்றன.
இந்நிலையில் இச்சாலையில் உள்ள மேலக்கரை, கரையிருப்பு, மேலக்கரை புதிய காலனி பகுதிகளுக்கு சாலைகள் பிரியும் பகுதியில் சாலைத் தடுப்பில் இடைவெளி விடுமாறு பொதுமக்கள் வலியுறுத்தினா். ஆனால், நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் இதைப் பொருள்படுத்தாமல் பணிகளைச் செய்ய முயன்றனராம்.
இந்நிலையில், மேலக்கரை புதிய காலனி பொதுமக்கள் திருநெல்வேலி-தாழையூத்து சாலையில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி பேரவை உறுப்பினா் ஏ.எல்.எஸ். லட்சுமணன் சென்று அவா்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா். பின்னா், அவா்களது கோரிக்கையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா். இதையடுத்து, அங்கு பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.