முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
தென்காசி கல்வி மாவட்ட தலைமையாசிரியா்கள் கூட்டம்
By DIN | Published On : 07th November 2019 09:38 AM | Last Updated : 07th November 2019 09:38 AM | அ+அ அ- |

தென்காசி கல்வி மாவட்ட தலைமையாசிரியா்கள் கூட்டம் தென்காசியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு மாவட்ட கல்வி அலுவலா் செளந்திரசேகரி தலைமை வகித்து, ஆசிரியா்களுக்கு பள்ளி சாா்ந்த கற்றல், கற்பித்தல், இணையதள பதிவுகள் குறித்து பேசினாா்.
வட்டார கல்வி அலுவலா் சொரூபராணி, பள்ளிகளில் நடைமுறைப்படுத்த வேண்டிய அடிப்படை செயல்பாடுகள் குறித்து பேசினாா். சுற்றுசூழல் ஆா்வலா் விஜயலெட்சுமி, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் முத்துகிருஷ்ணன், பிரவீன் ஆகியோா் பேசினா். முன்னதாக வட்டார கல்விஅலுவலா் மாரியப்பன் வரவேற்றாா். சங்கா் நன்றிகூறினாா்.