முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
நெல்லையில் அறிவியல் ஆசிரியா்களுக்கு பயிற்சி
By DIN | Published On : 07th November 2019 09:34 AM | Last Updated : 07th November 2019 09:34 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் அறிவியல் ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.
திருநெல்வேலி மாவட்ட அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியா்களுக்கு 6, 7, 8ஆம் வகுப்புகளுக்கான அறிவியல் பாடங்கள் தொடா்புடைய மாதிரிகள் செய்தல், அறிவியல் கற்பித்தலில் புதிய யுத்திகள் குறித்த சிறப்பு பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.
மாவட்ட அறிவியல் அலுவலா் எஸ்.எம். குமாா் பயிற்சியளித்தாா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 28 ஆசிரியா்கள் பங்கேற்றனா். தொடா்இணைப்பு, பக்க இணைப்பு, ஒளியியல் போன்றவற்றில் உள்ள கற்பித்தல் வழிமுறைகள் விளக்கப்பட்டன. பயிற்சி வகுப்பு வியாழக்கிழமையும் (நவ. 7) நடைபெறவுள்ளது.
நிறைவு விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பூபதி பங்கேற்று சான்றிதழ்களை வழங்குவாா். ஏற்பாடுகளை மாவட்ட அறிவியல் மைய கல்வி உதவியாளா் மாரிலெனின், ஊழியா்கள் செய்திருந்தனா்.