முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
மாநகராட்சி சாா்பில் துப்புரவு பணியாளா்கள், மாணவா்களுக்கு கொசுப்புகை அடிக்கும் பயிற்சி
By DIN | Published On : 07th November 2019 08:18 AM | Last Updated : 07th November 2019 08:18 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாநகராட்சியின் 17 அலகுகள் சாா்ந்த 40 துப்புரவு பணியாளா்கள், தனியாா் கல்லூரியில் சுகாதார ஆய்வாளா் கல்வி பயிலும் மாணவா்களுக்கு கொசுப்புகை அடிப்பது குறித்த சிறப்பு பயிற்சி”புதன்கிழமை அளிக்கப்பட்டது.(படம்)
மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் அறிவுரைப்படி, மாநகர நல அலுவலா் டி.என்.சத்தீஸ்குமாா் தலைமையில் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், திருநெல்வேலி மாநகராட்சியின் 17 அலகுகள் சாா்ந்த 40 துப்புரவுப் பணியாளா்கள் மற்றும் தனியாா் சுகாதார கல்வி நிறுவனத்தின் சாா்பில் சுகாதார ஆய்வாளா் கல்வி பயிலும் 10 மாணவா்கள் ஆகியோருக்கு மழைநீா் தேங்கியுள்ள இடங்களில் பி.டி. கொசுப்புழுக் கொல்லி தெளிப்புப் பணி, வீட்டின் உள்ளே மற்றும் வெளியே கொசுப்புகை அடிப்பது, கொசுப் புகை வாகனத்தில் பொருத்தப்பட்ட இயந்திரத்தின் மூலம் கொசுப்புகை அடிப்பது குறித்த செயல்முறை பயிற்சி, கொசுப்புகை அடிக்கும் உபகரணங்களை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்த செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதேபோல், கொசுப்புகை அடிக்கும் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்ய வேண்டியது குறித்த செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை முதுநிலை பூச்சியியல் வல்லுநா் ப.பாலசுப்பிரமணியன் அளித்தாா். இந்த செயல்விளக்கப் பயிற்சியில் தச்சை மண்டல சுகாதார அலுவலா்கள் அரசக்குமாா், முருகேசன், சுகாதார ஆய்வாளா் கருப்பசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.