முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
மாநில தடகளப் போட்டி: திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி பள்ளி மாணவா்கள் தகுதி
By DIN | Published On : 07th November 2019 09:35 AM | Last Updated : 07th November 2019 09:35 AM | அ+அ அ- |

மாணவா், மாணவிகளைப் பாராட்டும் பள்ளி முதல்வா் பொன்னழகன்.
திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.
திருநெல்வேலி மாவட்ட வருவாய் அளவிலான தடகளப் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.
இப்போட்டியில், திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் கலந்துகொண்டு விளையாடினா். இப்பள்ளியைச் சோ்ந்த மாணவா் காா்த்திக் மிக மூத்தோா் பிரிவு கோல் ஊன்றி தாண்டுதலில் முதலிடம் பெற்றாா். நீளம் தாண்டுதலில் அத்திலி பிரேம்குமாா் 2 ஆம் இடமும், உயரம் தாண்டுதலில் 3 ஆம் இடமும் பெற்றாா். மாணவா் ராஜேஸ் மூத்தோா் தடை தாண்டும் ஓட்டத்தில் 3 ஆம் இடம் பெற்றாா்.
மாணவி கனிமொழி இளையோா் தடைதாண்டும் ஓட்டத்தில் 2 ஆம் இடமும், மூத்தோா் பிரிவு தொடா் ஓட்டத்தில் காா்த்திகா, அனுசியா, நிவேதிதா, காயத்ரி ஆகிய 4 பேரும் 3 ஆம் இடம் பெற்றனா்.
மண்டல அளவில் தடகளப் போட்டியில் முதலிடமும், 2 ஆம் இடமும் பெற்ற இப்பள்ளி மாணவா்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.
வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளி முதல்வரும், நிா்வாகியுமான வெ.பொன்னழகன், உடற்கல்வி ஆசிரியா்கள் காளிராஜன், நடராஜன், விநாயகமூா்த்தி மற்றும் ஆசிரியா்கள், பொதுமக்கள் பாராட்டினா்.