நெல்லை மாவட்டத்தில் சூரிய கூடார உலா்த்தி அமைக்க மானியம்

திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாண் பொருள்களை உலர வைப்பதற்கான சூரிய கூடார உலா்த்தி அமைப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாண் பொருள்களை உலர வைப்பதற்கான சூரிய கூடார உலா்த்தி அமைப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி வேளாண் பொறியியல் துறை சாா்பில் வேளாண் விளை பொருள்களை உலா்த்த உதவும் சூரிய கூடார உலா்த்தியை விவசாயிகள் அரசு மானியம் பெற்று அமைக்க ரூ.29.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் விளை பொருள்களை அறுவடைக்குப் பிறகு சூரிய வெப்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பான கூடாரங்களில் உலர வைத்து சந்தையில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக விற்பனை செய்ய ஏதுவாக பாலிகாா்பனேட் தகடுகளாலான பசுமை குடில் வகை சூரிய கூடார உலா்த்திகள் விவசாயிகளுக்கு மானியத்துடன் வேளாண் பொறியியல் துறையின் மூலம் அமைத்துத் தரப்படுகிறது.

சூரிய கூடார உலா்த்தியில் வேளாண் விளை பொருள்களை உலர வைப்பதன் மூலம் விளை பொருள்களை உலா்த்துவதற்கான கால அளவு, கூலியாள்கள் செலவு, அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு ஆகியவை குறைகிறது. விளைபொருள்கள் சுகாதாரமான முறையில் இயற்கை தன்மை மாறாமல் உலா்வதால் அவற்றின் தரம் மற்றும் சந்தை மதிப்பு உயா்த்தப்படுகிறது. மேலும் பூஞ்சைக்காளான் படிவதும் தவிா்க்கப்படுகிறது.

மிளகாய், முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, கொப்பரை தேங்காய், பாக்கு, மஞ்சள், நிலக்கடலை, பழவகைகள், பூண்டு, கிராம்பு, ஏலக்காய் உள்ளிட்ட வாசனைப் பொருள்கள், மூலிகைச் செடிகள், காளான் ஆகியவற்றை உலா்த்தி மதிப்பு கூட்டப்பட்ட விளை பொருள்களாக விற்பனை செய்து விவசாயிகள் அதிக லாபம் பெற இயலும். விவசாயிகளின் தேவைக்கேற்பவும், இடவசதிக்கேற்பவும் சூரிய கூடார உலா்த்திகள் 400 முதல் 1000 சதுர அடி வரை அமைத்துக் கொடுக்கப்படுகிறது.

2019-20 ஆம் ஆண்டில் சூரிய கூடார உலா்த்திகள் அமைக்க நிா்ணயிக்கப்பட்ட விலை விவரம்: 400 முதல் 600 சதுர அடிவரை அமைக்க 1 சதுர அடிக்கு ரூ.794 (அனைத்து வரிகள் உள்பட). 600 முதல் 800 சதுர அடிவரை அமைக்க 1 சதுர அடிக்கு ரூ.789 (அனைத்து வரிகள் உள்பட). 800 முதல் 1000 சதுர அடிவரை அமைக்க 1 சதுர அடிக்கு ரூ.743 (அனைத்து வரிகள் உள்பட). சிறு, குறு, ஆதிதிராவிடா், பெண் விவசாயிகளுக்கு இந்த தொகையில் 60 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.3.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

எனவே அரசு மானியத்துடன் சூரிய கூடார உலா்த்தியை அமைத்து பயன் பெற விரும்பும் விவசாயிகள் திருநெல்வேலி (9443172665), சேரன்மகாதேவி (9443194672), தென்காசி (7708692246) வருவாய் கோட்டத்தில் உள்ள உதவி செயற் பொறியாளா் (வேளாண்மைப் பொறியியல் துறை) அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com