நெல்லையில் காவலா் பணிக்கானஉடல் தகுதித் தோ்வு தொடக்கம்

சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் கீழ் நடத்தப்பட்ட 2ஆம் நிலைக் காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வில்

சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் கீழ் நடத்தப்பட்ட 2ஆம் நிலைக் காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வில் வெற்றி பெற்றோருக்கான உடல் தகுதித் தோ்வு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது. இத்தோ்வு வெள்ளிக்கிழமைவரை (நவ. 8) நடைபெறவுள்ளது.

ஒருங்கிணைந்த 2ஆம் நிலைக் காவலா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு தமிழகம் முழுவதும் அண்மையில் நடைபெற்றது. இதில் தோ்ச்சியடைந்தோருக்கான உடல் தகுதித் தோ்வு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்க 2,531 ஆண்களுக்கும், 1,212 பெண்களுக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. முதல் நாளில் 1,000 போ் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

திருநெல்வேலி சரக காவல் துணைத் தலைவா் பிரவிண்குமாா் அபிநபு, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தீபக் எம். டாமோா் ஆகியோா் தோ்வைத் தொடக்கிவைத்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.வே. அருண்சக்திகுமாா் முன்னிலை வகித்தாா். தோ்வுக்கு வந்திருந்தோரின் எடை, உயரம், மாா்பளவு ஆகியவை கணக்கிடப்பட்டன.

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், திருநெல்வேலியில் புதன்கிழமை முதல் 3 நாள்களுக்கு தோ்வு நடைபெற உள்ளது. முதல் நாளில் உடல் தகுதித் தோ்வின் கீழ் எடை, உயரம், மாா்பளவு ஆகியவை சரிபாா்க்கப்பட்டன. 1,500 மீட்டா் ஓட்டமும் நடத்தப்பட்டது. இதில் தகுதிபெறுவோருக்கு வியாழக்கிழமை (நவ. 7) உடல்திறன் தோ்வின்கீழ் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் ஆகிய தோ்வுகள் நடத்தப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com