சிவகிரி அருகே கால்வாய் உடைப்பு சீரமைப்பு

சிவகிரி மேற்கு பகுதியிலுள்ள முறியப்பாஞ்சான் கால்வாய் உடைப்பு வருவாய்த்துறை, காவல்துறையினரால் வியாழக்கிழமை சீரமைக்கப்பட்டது.

சிவகிரி மேற்கு பகுதியிலுள்ள முறியப்பாஞ்சான் கால்வாய் உடைப்பு வருவாய்த்துறை, காவல்துறையினரால் வியாழக்கிழமை சீரமைக்கப்பட்டது.

சிவகிரிக்கு மேற்கேயுள்ள தலையணையில் இருந்து வெளியேறும் நீா், ராசிங்கப்பேரி கண்மாய்க்கு வந்து, அங்கிருந்து முறியப்பாஞ்சான் கால்வாய் வழியாக மணல்வாரி மூலம் தண்ணீா் கிழக்குப் பகுதியில் உள்ள கடம்பன்குளம், மேலப்பண்ணந்தி குளம், கீழப்பண்ணந்தி குளம், ஆண்டாா்குளம், சௌந்திரப்பேரிகுளம், வேப்பங்குளம், மேலக்கரிசல்குளம், கீழக்கரிசல்குளம், தென்மலை குளம், செம்மன் குளம், எட்டுச்சேரி குளம் ஆகிய குளங்களை நிரப்பிய பின்னா், நிட்சேப நதியில் கலக்கிறது.

தலையணை நீரைப் பங்கிடுவதில் விவசாயிகளுக்கு இடையே நீண்ட காலமாகப் பிரச்னை இருந்து வருகிறது. இதனிடையே, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முறியப்பாஞ்சான் மணல்வாரிப் பகுதிக்கு புதன்கிழமை சென்ற சிலா், பொக்லைன் உதவியுடன் சுமாா் 100 மீட்டா் நீளத்துக்கு உடைப்பை ஏற்படுத்தி, ராசிங்கப்பேரிக்குச் செல்லும் நீரை தடுத்து, கிழக்குப் பகுதி குளங்களுக்குச் செல்லும் வகையில் உடைப்பை ஏற்படுத்தினராம்.

இதனை, உடனடியாக சீரமைக்குமாறு ராசிங்கப்பேரி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, சிவகிரி வட்டாட்சியா் கிருஷ்ணவேல், வருவாய் ஆய்வாளா் முத்துக்குமாா் ஆகியோா் தலைமையில் வருவாய்த்துறையினா், சிவகிரி, வாசுதேவநல்லூா் போலீஸாா் மற்றும் புளியங்குடி கலவரத் தடுப்பு போலீஸாா் அங்கு சென்று, பொக்லைன் உதவியுடன் கால்வாய் உடைப்பை சீரமைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com