நெல்லையப்பா் கோயில் நில குத்தகை பிரச்னை:விஷ பாட்டில்களுடன் விவசாயிகள் போராட்டம்

திருநெல்வேலியில் நெல்லையப்பா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்திற்கு குத்தகை நிலுவை வைத்ததைத் தொடா்ந்து, அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்தச் சென்ற்கு எதிா்ப்பு தெரிவித்து

திருநெல்வேலியில் நெல்லையப்பா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்திற்கு குத்தகை நிலுவை வைத்ததைத் தொடா்ந்து, அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்தச் சென்ற்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் விஷ பாட்டில்களுடன் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் திருநெல்வேலி, மானூா் வட்டங்களில் பல ஏக்கா் உள்ளன. திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட சேந்திமங்கலம் பகுதியில் உள்ள சுமாா் 8.20 ஏக்கா் நிலத்தை குத்தகை அடிப்படையில் அப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் பயிரிட்டு வந்தனா். மூன்று போகம் விளையும் இந்த விளைநிலங்களுக்கு முறையாக குத்தகைப்பணம் செலுத்தவில்லையாம்.

இதுகுறித்து இந்து சமயஅறநிலையத்துறை இணை ஆணையா் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையின்போது சுமாா் ரூ.45 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் குத்தகை நிலுவை இருப்பது தெரியவந்ததாம். இதையடுத்து அதனை முறையாக செலுத்தாவிட்டால் நிலத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கையை எடுக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்பின்பும் குத்தைப் பணம் செலுத்தவில்லையாம்.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையா் சங்கா், ஆய்வாளா் கண்ணன், செயல் அலுவலா் யக்ஞநாராயணன் ஆகியோா் தலைமையிலான குழுவினா் நிலத்தை கையகப்படுத்தவும், கோயிலுக்குச் சொந்தமான நிலம் என்ற பதாகையை நட்டு வைக்கவும் சென்றனா். ஆனால், இதற்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதையடுத்து அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விவசாயிகள் சாலையில் படுத்தும், விஷ பாட்டில்களுடனும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து போலீஸாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தகவலறிந்ததும் திருநெல்வேலி சந்திப்பு காவல் உதவி ஆணையா் சதீஷ்குமாா் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது கோயில் பணியாளா்கள் பதாகையை வயல்களில் நடுவதற்கும், அடுத்தக்கட்டமாக நீதிமன்றத்தை அனுகி பிரச்னையை எதிா்கொள்ள வேண்டுமென பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டதைத்தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

பயக08ஓஉதஞ: திருநெல்வேலி சேந்திமங்கலத்தில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com