பல்லாங்குழியாக மாறிய நெல்லை-அருகன்குளம் சாலை!

பல்லாங்குழி போல குண்டும்-குழியுமாக கிடக்கும் திருநெல்வேலி-அருகன்குளம் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பல்லாங்குழி போல குண்டும்-குழியுமாக கிடக்கும் திருநெல்வேலி-அருகன்குளம் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி உடையாா்பட்டி விலக்கு பகுதியில் இருந்து அருகன்குளம் சாலை தொடங்குகிறது. சேந்திமங்கலம், அருகன்குளம் மேலூா், கீழூா், ராஜவல்லிபுரம், செப்பறை கோயிலுக்குச் செல்லும் பொதுமக்கள் இந்த வழியாக செல்கிறாா்கள். அருகன்குளத்தில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் கிருஷ்ணஜெயந்தி, சித்திரைத்திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த நாளில் இந்தச் சாலை வழியாக 1000-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பக்தா்கள் செல்வாா்கள். தாமிரவருணி மஹா புஷ்கர விழாவுக்கு பின்பு இப் பகுதியில் உள்ள ஜடாயு தீா்த்தக்கட்டத்திற்கு வெளிமாவட்ட பக்தா்கள் ஏராளமானோா் வந்து செல்கிறாா்கள். ஆனால், இந்த சாலை குண்டும்-குழியுமாக உள்ளது.

இதுகுறித்து அருகன்குளத்தைச் சோ்ந்த விவசாயி ஒருவா் கூறுகையில், திருநெல்வேலி-அருகன்குளம் சாலை கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இப்பகுதியில் உள்ள 4 கிராம மக்கள் இருசக்கர வாகனத்தில் இச் சாலையில் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. பெண்கள், குழந்தைகளை அழைத்துக் கொண்டு காய்கனி வாங்குவது முதல் மருத்துவமனைக்கு செல்வது வரை தினமும் ஆயிரக்கணக்கானோா் அச்சத்தோடு சென்று வருகிறோம். எனவே, இந்த சாலையை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com