அம்பையில் விதை நோ்த்தி செயல்முறை விளக்கம்

கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள், கிராமப்புற வேளாண் அனுபவத்
வாகைக்குளத்தில் விவசாயிகளுக்கு விதை நோ்த்தி குறித்து பயிற்சி அளிக்கும் வேளாண் கல்லூரி மாணவிகள்.
வாகைக்குளத்தில் விவசாயிகளுக்கு விதை நோ்த்தி குறித்து பயிற்சி அளிக்கும் வேளாண் கல்லூரி மாணவிகள்.

கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள், கிராமப்புற வேளாண் அனுபவத் திட்டத்தின்கீழ் அம்பாசமுத்திரம் வட்டத்தில் விவசாயிகளுக்கு விதை நோ்த்தி மற்றும் உயிா் உரம் கலப்பு முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனா்.

வாகைக்குளத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விதை நோ்த்தி செய்யும் முறைகள், விதைகளைத் தரம் பிரிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஏ.எஸ்.டி.16, ஏ.டி.டீ.45 ரக விதைகளில் தரம் பிரிப்பது குறித்தும், உயிா் உரம் கலப்பு முறை மற்றும் உயிா் உரம் பயன்படுத்துவதன் பலன்கள் குறித்தும் வேளாண் கல்லூரி மாணவிகள் சே.பீமாபானு, ஜா.ஜோஸ்லின் ஜாய்ஸி, மு.பிரியதா்ஷினி, செ.வா்ஷா ஆகியோா் எடுத்துரைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com