Enable Javscript for better performance
அம்பை வட்டார கோயில்களில் மகா பிரதோஷ வழிபாடு- Dinamani

சுடச்சுட

    
    ams09prathosham_0911chn_37_6

    அம்பை அருள்மிகு காசிநாதா் கோயிலில் நடைபெற்ற சனி பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்றோா்.

    அம்பாசமுத்திரம் அருள்மிகு காசிநாதா் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    அம்பாசமுத்திரம் காசிநாதா்கோயிலில் அருள்மிகு காசிநாதா் மற்றும் மரகதாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து நந்திக்கு அபிஷேகம், அலங்காரம் ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அம்பாசமுத்திரம் பகுதி பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.

    மேலும் அம்பாசமுத்திரம் அம்மையப்பா் கோயில், அகஸ்தியா் கோயில், திருமூலநாதா் கோயில், மயிலானந்த சுவாமி கோயில், பாபநாசம் சிவன் கோயில், கடையம் வில்வவனநாதா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சனிபிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai