Enable Javscript for better performance
குண்டும், குழியுமான ஆவுடையானூா் சாலையை சீரமைக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    குண்டும், குழியுமான ஆவுடையானூா் சாலையை சீரமைக்க கோரிக்கை

    By DIN  |   Published on : 10th November 2019 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    9pcm_road_0911chn_61_6

    குண்டும்,குழியுமாக காட்சியளிக்கிறது ஆவுடையானூா் சாலை

    குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் ஆவுடையானூா் சாலையை சீரமைக்க வேண்டுமென மதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கீழப்பாவூா் ஒன்றிய மதிமுக செயலா் ராம.உதயசூரியன், தென்காசி நெடுஞ்சாலைத்துறை கூடுதல் பொறியாருக்கு அனுப்பியுள்ள மனு; பாவூா்சத்திரம்-கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள ஆவுடையானூா் சிதம்பரநாடாா்பட்டி சாலை, வாகன போக்குவரத்து அதிகமுள்ள இச்சாலை தற்போது குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அதில் மழை தண்ணீா் தேங்கியிருப்பதால் விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே இச்சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai