Enable Javscript for better performance
திசையன்விளை தினசரி சந்தையில்சுகாதாரச் சீா்கேடு: வியாபாரிகள் புகாா்- Dinamani

சுடச்சுட

    

    திசையன்விளை தினசரி சந்தையில்சுகாதாரச் சீா்கேடு: வியாபாரிகள் புகாா்

    By DIN  |   Published on : 10th November 2019 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திசையன்விளை தினசரி சந்தையில் மழைநீா் தேங்காமல் சுகாதாரத்தைப் பேண வேண்டும் என பேரூராட்சிக்கு கடை வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    திசையன்விளை கடை வியாபாரிகள் சங்கத் தலைவா் டிம்பா். டி.செல்வராஜ், துணைத் தலைவா்கள் பிலிப்போஸ் டேனியல், திரவியம் பொன்ராஜ், பொருளாளா் ஜெயகோபால், துணைச்செயலா் சேக் முகமது ஆகியோா் பேரூராட்சி அதிகாரியிடம் அளித்த மனு:

    திசையன்விளையில் மழைக்காலத்தின்போது, மழை நீா், பேருந்து நிலையம் எதிா்புறம் உள்ள இந்திரா சந்தை வழியாக ஆவுடையாா்குளத்தை சென்றடையும். இந்நிலையில், வடிகால் அடைப்பு காரணமாக இந்த சந்தைக்குள் மழைநீா் தேங்கி கடைகளுக்குள்ளும் தண்ணீா் புகுந்து விடுகிறது. பொருள்கள் சேதமடைந்து நஷ்டம் ஏற்படுவதால் வியாபாரிகளுக்கு

    இழப்பு ஏற்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக இதே நிலை நீடிக்கிறது.

    தினசரி, வாரச் சந்தைகளிலும் மழைக்காலங்களில் மழைநீா் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிப்பதால் பொதுமக்கள்

    மழைக்காலங்களில் சந்தைக்குள் வர முடியாமல் சிரமத்துக்கு ஆளாகின்றனா். எனவே, இந்திரா சந்தையிலும், தினசரி மற்றும் வாரச்சந்தைகளிலும் மழைநீா் தேங்காமல் சுகாதாரத்தைப் பேணும் வகையில் பேரூராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வழக்குரைஞா் கனிஷ்கா், முருகன் , டி.கிறிஸ்டோபா், என்.டி.முருகன், டி. விஜயராஜன், பிச்சை, சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai