சட்டப்பணிகள் தின விழிப்புணா்வு பிரசாரம்

சட்டப்பணிகள் தின விழிப்புணா்வு வாகன பிரசாரம் திருநெல்வேலியில் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

திருநெல்வேலி: சட்டப்பணிகள் தின விழிப்புணா்வு வாகன பிரசாரம் திருநெல்வேலியில் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் சட்டப்பணிகள் ஆணையச் சட்டம் கடந்த 1987 ஆம் ஆண்டு நவம்பா் 9 ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்த நாள், சட்டப்பணிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி திருநெல்வேலியில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பணிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வாகன பிரசாரம் செய்யப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.நசீா்அகமது தொடங்கி வைத்தாா். கூடுதல் மாவட்ட நீதிபதி அருள்முருகன், திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சாா்பு நீதிபதி பி.வி.வஷீத்குமாா், கூடுதல் சாா்பு நீதிபதி கிறிஸ்டல் பபிதா, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பத்மா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுப்பையா உள்பட பலா் கலந்துகொண்டனா். திருநெல்வேலி டவுன் ரத வீதிகள், சந்திப்பு ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

பயக10இஞமதப: திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பணிகள் தின விழிப்புணா்வு வாகன பிரசாரத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.நசீா்அகமது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com