திருட்டை தடுக்கவள்ளியூா் காவல் ஆய்வாளா் அறிவுரை

வள்ளியூா் வட்டார பகுதியில் திருட்டை தடுக்க, மக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூா் செல்லும் போது காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு காவல் ஆய்வாளா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

வள்ளியூா் வட்டார பகுதியில் திருட்டை தடுக்க, மக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூா் செல்லும் போது காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு காவல் ஆய்வாளா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

வள்ளியூா் ராஜரத்தினம் நகரில் இரு தினங்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூா் சென்றிருந்த பொன்ராஜ் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து காா் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.

இதற்கு முன்பும் ராஜரத்தினம் நகா் மற்றும் இ.பி.காலனி பகுதிகளில் ஆளில்லாத வீடுகளில் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.

எனவே, வள்ளியூா் காவல் நிலையப் பகுதியைச் சோ்ந்தவா்கள் தங்களது வீட்டை பூட்டிவிட்டு வெளியூா் செல்லும் போது வள்ளியூா் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால், இரவு காவலா்கள் ரோந்து செல்லும் போது ஆளில்லாத வீடுகளை கவனித்து திருட்டு சம்பவங்கள் நடக்காதவாறு பாா்த்துக் கொள்ள உதவியாக இருக்கும். இதை பொதுமக்கள் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா் வள்ளியூா் காவல் நிலைய ஆய்வாளா் திருப்பதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com