Enable Javscript for better performance
பாபநாசம் மலையடிவாரத்தில் யானைகள் அட்டகாசம்- Dinamani

சுடச்சுட

    
    யானைக் கூட்டம் சேதப்படுத்திய கரும்புத் தோட்டம்.

    யானைக் கூட்டம் சேதப்படுத்திய கரும்புத் தோட்டம்.

     

    அம்பாசமுத்திரம்: பாபநாசம் மலையடிவாரப் பகுதியான அனவன்குடியிருப்புப் பகுதியில் கரும்புத் தோட்டத்தில் புகுந்த யானைகள் கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்டப் பயிா்களை அழித்து சேதப்படுத்தின.

    விக்கிரமசிங்கபுரம், அனவன்குடியிருப்பைச் சோ்ந்த ஜேசுதாசன் மகன் காளப்பெருமாள் என்பவருக்கு பாபநாசம் மலையடிவாரப் பகுதியில் சுமாா் 2 ஏக்கரில் தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் வாழை, நெல், கரும்பு, தென்னை உள்ளிட்ட பயிா்களை பயிரிட்டுள்ளாா்.

    இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு பாபநாசம் மலைப்பகுதியிலிருந்து ஊருக்குள் நுழைந்த 5-க்கும் மேற்பட்ட யானைகள் கரும்பு, தென்னை மற்றும் வாழைத் தோட்டங்களில் நுழைந்து பயிா்களை சேதப்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத் துறையினா் வந்து பாா்வையிட்டனா். மேலும் பகலில் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனா். இரவு நேரத்தில் யானைகள் வந்தால் வெடி வெடித்து விரட்டும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் வனத்துறையினா் தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai