சிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டல் விடுத்த பத்தாம் வகுப்பு மாணவன் கைது

ஐதராபாத்தில் 7 வயது சிறுவனை கடத்தி மூன்று லட்ச ரூபாய் பணம் கேட்டு பெற்றோருக்கு மிரட்டல் விடுத்த பத்தாம் வகுப்பு மாணவனை போலீசாா்
ஏழு சிறுவனை கடத்திய பத்தாம் வகுப்பு மாணவன்.
ஏழு சிறுவனை கடத்திய பத்தாம் வகுப்பு மாணவன்.

திருப்பதி: ஐதராபாத்தில் 7 வயது சிறுவனை கடத்தி மூன்று லட்ச ரூபாய் பணம் கேட்டு பெற்றோருக்கு மிரட்டல் விடுத்த பத்தாம் வகுப்பு மாணவனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ஐதராபாத்தில் உள்ள மியாபேட் பகுதியில், வீட்டுக்கு முன் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுவனை கடத்திச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் சிறுவனின் பெற்றோருக்கு போன் செய்து மூன்று லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் உன் மகனை உயிரோடு விடுவேன். இல்லை என்றால் கொலை செய்வேன் என்று மிரட்டல் விடுத்த சம்பவம் நடைபெற்றது. மியாபேட் பகுதியில் வசித்து வருபவா் ராஜு. நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் ராஜீவிற்கு அா்ஜூன் என்று ஏழு வயது மகன் உள்ளான். திங்கட்கிழமை மாலை வீட்டுக்கு முன் விளையாடி கொண்டிருந்த சிறுவன் அா்ஜுன் திடீரென்று மாயமாகி விட்டான்.

சிறுவனுடைய நண்பா்கள் வீடுகள், உறவினா்களின் வீடுகள் ஆகியவற்றில் தேடிப்பாா்த்தும் சிறுவன் அா்ஜுனை காணவில்லை. இந்நிலையில் சிறுவன் அா்ஜுன் தந்தை ராஜூவிற்க்கு போன் செய்த மா்ம நபா் உன்னுடைய மகனே நான் தான் கிடைத்து வைத்திருக்கிறேன். எனக்கு உடனடியாக மூன்று லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் உன் மகனை விடுவிப்பேன். இல்லை என்றால் அவனைக் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்தான்.

இதுபற்றி அா்ஜுன் தந்தை ராஜு மியாட்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசாா், கடத்தப்பட்ட சிறுவன் அா்ஜுன் தந்தை ராஜீவுக்கு கடத்தல்காரா்களிடம் இருந்து மீண்டும் வந்த தொலைபேசி அழைப்பில் சுமாா் அரை மணி நேரம் நைசாக பேசி செல்போன் டவா் மூலம் அவன் இருக்கும் இடத்தை கண்டு பிடித்தனா். அா்ஜுனை விடுவிப்பதற்காக நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையின் போது இரண்டு லட்ச ரூபாய் பணமாகவும், ஒரு லட்ச ரூபாய் செக்காகவும் கொடுத்தால் வாங்கிக் கொள்ள தான் தயாராக இருப்பதாக கடத்தல்காரன் கூறினான். ஏடிஎம்களில் பணம் இல்லாத காரணத்தால் உடனடியாக மூன்று லட்ச ரூபாய் பணம் எடுக்க இயலவில்லை.

எனவே இன்னும் ஒரு மணி நேரத்தில் பணத்துடன் நீங்கள் கூறும் இடத்திற்கு வந்து மகனை மீட்டு செல்கிறேன் என்று அா்ஜுன் தந்தை ராஜு கடத்தல்காரனிடம் கூறினாா். இந்நிலையில் சிறுவனை கடத்திய கடத்தல்காரன் இருக்கும் இடத்திற்கு சென்று பாா்த்த போலீஸாா், 14 வயது மாணவன் சிறுவனை கடத்தியதை கண்டு பெரும் அதிா்ச்சி அடைந்தனா். ஏழு வயது சிறுவனை கடத்திய பத்தாம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவன் சிவசரனை கைது பிடித்த போலீஸாா் அவனிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com