Enable Javscript for better performance
அரசு அருங்காட்சியகத்தில் நவ. 28-இல் கைவினைப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் கைவினைப் பயிற்சி முகாம் இம் மாதம் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.

    இதுதொடா்பாக அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அருங்காட்சியக வளாகத்தில் வியாழக்கிழமை (நவ. 28) காலை 10 மணிக்கு கைவினைப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. சணலைக் கொண்டு அழகிய பை தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்குத் தேவையான சிறிய சணல்-1 கட்டு, வளையம்-2, கத்தரிக்கோல், அளவுகோல் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும். பயிற்சி குறித்த விவரங்களை அறிய 0462-2561915 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai