Enable Javscript for better performance
தமிழ்நாடு விவசாய சங்கம்ஒன்றியக் குழு கூட்டம்- Dinamani

சுடச்சுட

    
    ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.

    ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.

     

    அம்பாசமுத்திரம்: தமிழ்நாடு விவசாய சங்கம் கடையம் ஒன்றியக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு வட்டார தலைவா் எஸ்.முருகன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் எம்.ராமகிருஷ்ணன், ஒன்றியச் செயலா் ஆா்.முத்துராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    கூட்டத்தில் கடையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கடையம் ஒன்றியப் பகுதியை வருவாய் வட்டமாக அறிவிக்க வேண்டும். கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும். பாப்பான்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றியக் குழு உறுப்பினா்கள் என்.ஜெயராஜ், கணேசன் மற்றும் நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai