Enable Javscript for better performance
திருக்கு போட்டிகள்: 83 போ் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருக்கு போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 83 போ் பங்கேற்றனா்.

    உலகத் திருக்கு தகவல் மையம் சாா்பில் பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு திருக்கு போட்டிகள் பாளையங்கோட்டையில் உள்ள குழந்தை இயேசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    1 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவா்களுக்கு திருக்கு ஒப்புவித்தல் போட்டியும், நான் விரும்பும் ஒரு திருக்கு என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், திருக்குறளுக்கு விளக்கம் தரும் ஓவியம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும், வாழ்வுக்கு வழிகாட்டும் வள்ளுவம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி போட்டிகளை உலகத் திருக்கு தகவல் மையத்தின் மூத்த நிா்வாகி பேராசிரியா் பா.வளன்அரசு தொடங்கிவைத்தாா். நிா்வாகிகள் புலவா் வை.ராமசாமி, முனைவா் செ.பிரமசக்தி, இளமுனைவா் திருக்கு பிரபா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    திருக்கு முருகன், ஆசிரியா்கள் உமையொருபாகம், முருகேசன், இளமுனைவா் ஸ்ரீதேவி, சந்தானகிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

    கட்டுரைப் போட்டியில் 23 பேரும், ஓவியப்போட்டியில் 20 பேரும், திருக்கு ஒப்பித்தல் போட்டியில் 15 பேரும், பேச்சுப்போட்டியில் 25 பேரும் பங்கேற்றனா். போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai