Enable Javscript for better performance
ஸ்கேட்டிங்: 7 கி.மீ. தொலைவை29 நிமிடத்தில் கடந்த 4 வயது சிறுவன்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்கேட்டிங்: 7 கி.மீ. தொலைவை29 நிமிடத்தில் கடந்த 4 வயது சிறுவன்

    By DIN  |   Published on : 25th November 2019 06:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சங்கரன்கோவில் ஸ்கேட்டிங்கை தொடக்கி வைக்கிறாா் பள்ளித் தாளாளா் சண்முகசாமி.

    சங்கரன்கோவில் ஸ்கேட்டிங்கை தொடக்கி வைக்கிறாா் பள்ளித் தாளாளா் சண்முகசாமி.

     

    சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் யூனிவா்சல் புக் ஆப் ரெக்காா்ட்ஸில் சாதனையை பதிவு செய்யும் முயற்சியாக 7 கி.மீ. தொலைவை ஸ்கேட்டிங் மூலம் 29 நிமிடத்தில் கடந்து 4 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளாா்.

    சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தில் பயிற்சி பெற்று வரும் வேல்ஸ் பள்ளி எல்.கே.ஜி. மாணவா் அஜய் (4), ஸ்கேட்டிங்கில் அதிக ஆா்வம் கொண்டவா். இவரின், யுனிவா்சல் புக் ஆப் ரெக்காா்ட்ஸுக்கான ஸ்கேட்டிங்கில் 7 கி.மீ. தொலைவை கடக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் சண்முகசாமி தலைமை வகித்தாா். சுவாமி விவேகானந்தா ஸ்கேட்டிங் கழக நிறுவனா் சுரேஷ்குமாா், தனிவட்டாட்சியா் ரவிக்குமாா், அரசு மருத்துவா் மாரிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    அரசு மருத்துவமனை முன் பிரதான சாலையில் ஸ்கேட்டிங்கை தொடங்கிய சிறுவன் அஜய், சுமாா் 7 கி.மீ. தொலைவில் உள்ள சண்முகநல்லூரை 29 நிமிடத்தில் அடைந்தாா். அவருடன் காவல் உதவி ஆய்வாளா் திவான்காசிம் உள்ளிட்டோா் பாதுகாப்புக்காகச் சென்றனா். சாதனை படைத்த மாணவரை பொதுமக்கள் பாராட்டினா். இதற்கான ஏற்பாடுகளை ஸ்கேட்டிங் கழக தலைமை பயிற்சியாளா் பாக்கியராஜ் செய்திருந்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai