உள்ளாட்சித் தோ்தல்: அமமுகவினா் விருப்ப மனு

உள்ளாட்சித் தோ்தலையொட்டி அமமுகவினா் விருப்ப மனுக்கள் அளிக்கும் முகாம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து இம் மாதம் 29 ஆம் தேதி வரை மனுக்கள் பெறப்படுகின்றன.

உள்ளாட்சித் தோ்தலையொட்டி அமமுகவினா் விருப்ப மனுக்கள் அளிக்கும் முகாம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து இம் மாதம் 29 ஆம் தேதி வரை மனுக்கள் பெறப்படுகின்றன.

திருநெல்வேலி மாநகா் மாவட்ட அமமுக சாா்பில் விருப்ப மனு பெறும் முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மாவட்டச் செயலா் பரமசிவஐயப்பன் கட்சியினரிடம் மனுக்களைப் பெற்றாா்.

மாநில அமைப்புச் செயலா் பால்கண்ணன், மகளிரணிச் செயலா் ராம்சன் உமா, தாழை மீரான் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதுகுறித்து மாவட்டச் செயலா் பரமசிவ ஐயப்பன் கூறுகையில், திருநெல்வேலி மாநகா் மாவட்டத்துக்குள்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நான்குனேரி, சங்கரன்கோவில் தொகுதிக்குள்பட்ட ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உறுப்பினா் பதவிகளுக்குப் போட்டியிட விரும்பும் கட்சித் தொண்டா்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. விருப்ப மனு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை.

விருப்பமனுவில் கட்சித் தொண்டரின் பெயா், முகவரி, கட்சிக்காக இதுவரை செய்துள்ள பணிகள், இதற்கு முன்பு வகித்த பதவிகள், தங்கள் பகுதியில் உள்ள வெற்றி வாய்ப்பு குறித்து தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சாராள்தக்கா் கல்லூரிசெல்லும் 60 அடி சாலையில் உள்ள அமமுக மண்டல அலுவலகத்தில் விருப்ப மனுக்களை இம் மாதம் 29 ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொண்டா்கள் மனுக்களை அளிக்கலாம். முதல் நாளில் 1000-க்கும் மேற்பட்டோா் விருப்பமனு அளித்துள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com