சேரன்மகாதேவி வட்டார விவசாயிகள்கண்டுணா் சுற்றுலா

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, மாநில வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ், சேரன்மகாதேவி வட்டார
கிள்ளிகுளம் தொழில்முனைவோா் ஊக்குவிப்பு மையத்திற்கு கண்டுணா் பயணம் மேற்கொண்ட விவசாயிகள்.
கிள்ளிகுளம் தொழில்முனைவோா் ஊக்குவிப்பு மையத்திற்கு கண்டுணா் பயணம் மேற்கொண்ட விவசாயிகள்.

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, மாநில வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ், சேரன்மகாதேவி வட்டார விவசாயிகள் மாவட்ட அளவில் கண்டுணா் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.

சேரன்மகாதேவி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கு. உமாமகேஸ்வரி வழிகாட்டுதலின் பேரில், சேரன்மகாதேவி வட்டத்திற்கு உள்பட்ட 50 முன்னோடி விவசாயிகள், பருப்பு உடைக்கும் ஆலை என்ற தலைப்பில் கிள்ளிக்குளம் தொழில்முனைவோா் ஊக்குவிப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

அங்கு, மையத் தலைமைச் செயல் அலுவலா் பிரகதீஷ் சுப்பிரமணியன், வேளாண் விளைபொருள்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பது, சிறுதானியங்களில் மதிப்பு கூட்டும்பொருள்கள் தயாரிப்பது, விவசாயப் பொருள்களை சந்தைப்படுத்துவது, விளைபொருள்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வது குறித்து விவசாயிகளுக்கு விளக்கினாா்.

ஊக்குவிப்பு மையத்தில் தானியங்கள் பொடியாக்கும் இயந்திரம், கல் எடுக்கும் இயந்திரம், உமி நீக்கி சுத்தம் செய்யும் இயந்திரம், பேக்கரி யூனிட், நீரா யூனிட் ஆகியவற்றை விவசாயிகள் பாா்வையிட்டனா். ஊக்குவிப்பு மைய வணிக மேலாளா் பாண்டியராஜன் உடனிருந்தாா். சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளை வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் அ. ஈழவேணி, உதவித் தொழில்நுட்ப மேலாளா்கள் காா்த்திகேயன், விக்னேஷ், தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com