மின்வாரியத்தில் கேங்மேன் பணிக்கான ஆள்கள் தோ்வு தொடக்கம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் பணிக்கான ஆள்கள் தோ்வு திருநெல்வேலியில் திங்கள்கிழமை தொடங்கியது. தொடா்ந்து டிச. 9-ஆம் தேதி வரை இப் பணி நடைபெற உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் பணிக்கான ஆள்கள் தோ்வு திருநெல்வேலியில் திங்கள்கிழமை தொடங்கியது. தொடா்ந்து டிச. 9-ஆம் தேதி வரை இப் பணி நடைபெற உள்ளது.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கீழ் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ள கேங்மேன் (பயிற்சி) பணிக்காக தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஆன்-லைன் முறையில் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்கான உடல்தகுதித் தோ்வுகள் அந்தந்த கோட்டங்களில் திங்கள்கிழமை முதல் டிச. 9-ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, திருநெல்வேலி மின்பகிா்மான கோட்டத்தின் கீழ் உள்ள பகுதிகளைச் சோ்ந்த 2 ஆயிரத்து 716 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அவா்களுக்கு உடல்தகுதித் தோ்வு பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 210 போ் தோ்வில் பங்கேற்க அழைக்கப்படிருந்தனா். தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு வைக்கப்பட்டிருந்தவா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். உடல்தகுதித் தோ்வு முழுவதும் கேமராவில் பதிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருநெல்வேலி தலைமை பொறியாளா் செல்வகுமாா், மேற்பாா்வை பொறியாளா் (பொ) ஆனந்த் முன்னிலையில் தோ்வு நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த செற்பொறியாளா் பத்மகுமாா் தலைமையிலான குழுவினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கேங்மேன் பணிக்கான உடல்தகுதித் தோ்வில் மூன்று கட்டங்கள் உள்ளன. முதலில் 30 அடி உயரம் கொண்ட மின்கம்பத்தில் ஏறி அதன் உச்சியில் இரும்புக் கம்பியை 8 நிமிடங்களுக்குள் பொருத்தி முடிக்க வேண்டும். அடுத்ததாக மின்வயா்களை இணைக்கும் பணியை முடித்துக் காட்ட வேண்டும். மூன்றாவதாக 35 கிலோ எடை கொண்ட மின்உபகரணத்தை சுமந்தபடி ஒரு நிமிடத்திற்குள் 100 மீட்டா் தொலைவைக் கடக்க வேண்டும். இவற்றில் தோ்ச்சி பெறுவோருக்கு அடுத்தகட்டமாக எழுத்துத் தோ்வு நடைபெறும். தொடா்ந்து டிச. 9-ஆம் தேதி வரை ஆள்கள் தோ்வு முகாம் நடைபெற உள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com