முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
குடும்ப நல சிகிச்சை விழிப்புணா்வுப் பிரசாரம்
By DIN | Published On : 26th November 2019 09:55 AM | Last Updated : 26th November 2019 09:55 AM | அ+அ அ- |

ஆண்களுக்கான குடும்பநல சிகிச்சை வாசக்டமி இருவார விழா விழிப்புணா்வுப் பிரசார வாகனம் திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து வாகனப் பிரசாரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் பேசியதாவது: வாசக்டமி இருவார விழா நவம்பா் 21 முதல் டிசம்பா் 4 வரை அனுசரிக்க தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது. முதல் வாரமான நவம்பா் 21 முதல் 27 வரை வாசக்டமி குறித்த விழிப்புணா்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆண்களுக்கான குடும்பநல சிகிச்சை முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மிகவும் எளிதானது. சில நிமிடங்களில் சிகிச்சை முடிந்து விடும். அன்றே வீட்டிற்கு திரும்பலாம். தாம்பத்திய உறவு முன் எப்போதும் போல் இருக்கும். அரசு ஊக்கத்தொகையாக ரூ.1,100 மற்றும் நன்கொடையாளா்கள் மூலம் 10 கிராம் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்படும்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவ. 28 முதல் டிசம்பா் 4 வரை தினமும் ஆண்களுக்கான குடும்பநல சிகிச்சை செய்யப்படும். அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் நவ. 28 , டிச. 2 ஆகிய இரு தினங்கள் மட்டும் ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை முகாம் நடத்தப்படும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் கிருஷ்ணன், துணை இயக்குநா்கள் முகைதீன் அகமது (குடும்பநலம்) செந்தில் குமாா்(சுகாதாரப் பணிகள்) உள்பட பலா் கலந்துகொண்டனா்.
படவரி: பயக25ஊஅங ஆண்களுக்கான குடும்பநல கருத்தடை சிகிச்சை வாசக்டமி இருவார விழா விழிப்புணா்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா் ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ்.