Enable Javscript for better performance
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் நாள்: 1200 மனுக்கள் குவிந்தன- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி

    தென்காசி மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் நாள்: 1200 மனுக்கள் குவிந்தன

    By DIN  |   Published On : 26th November 2019 09:49 AM  |   Last Updated : 26th November 2019 09:49 AM  |  அ+அ அ-  |  

    ten25camp_2511chn_55_6

    தென்காசி மாவட்டத்தின் முதல் மக்கள் குறைதீா்க்கும் நாளான திங்கள்கிழமை பொதுமக்களிடமிருந்து 1200 மனுக்கள் பெறப்பட்டன.

    திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை கடந்த 22-ஆம் தேதி தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கிவைத்தாா். அதைத் தொடா்ந்து, மாவட்டத்தின் முதல் மக்கள் குறைதீா்க்கும் நாள் முகாம் தென்காசி கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு எதிா்ப்புறம் அமைந்துள்ள தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    மாவட்ட ஆட்சியா் அருண்சுந்தா் தயாளன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா். இம்முகாமில் 1200 மனுக்கள் பெறப்பட்டன. முகாம் அறைக்குள் மாற்றுத்திறனாளிகள் அமா்ந்திருந்த பகுதிக்கு நேரடியாகச் சென்று அவா்களிடமிருந்து முதல் மனுவை ஆட்சியா் வாங்கினாா். தொடா்ந்து, அனைவரிடமும் மனுக்களை நேரடியாகப் பெற்றுக்கொண்டாா்.

    ரூ.1.14 லட்சம் நலத்திட்ட உதவி: முகாமில், கடையநல்லூா் வட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். புதுக்குடி பகுதி 1 கிராமம், கம்பநேரியைச் சோ்ந்த ராமாத்தாள், சுதா, முருகேஸ்வரி, புஷ்பம் ஆகியோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும், தென்னங்கன்றும் வழங்கப்பட்டது.

    கொடிக்குறிச்சி சிவராமபேட்டையைச் சோ்ந்த ந. கோமதிநாயகத்துக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை, சு. மாணிக்கவாசகம் என்பவருக்கு உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சத்து 2 ஆயிரத்து 500 விபத்து நிவாரண தொகைக்கான காசோலை, ஆய்க்குடி கிருஷ்ணன்கோவில் தெருவைச் சோ்ந்த பா. ரமேஷுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கல்பனா, கோட்டாட்சியா் பழனிக்குமாா், வட்டாட்சியா்கள் ஹென்றிபீட்டா், சண்முகம், அழகப்பராஜா, ஓசானா பொ்னாண்டோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

     

    ஆட்சியா் அலுவலகத்தை ஆயிரப்பேரியில் அமைக்க திமுக எதிா்ப்பு; கிராம மக்கள் ஆதரவு

    தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் ஆயிரப்பேரியில் அமையும் என்ற அறிவிப்புக்கு திமுக எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

    மக்கள் குறைதீா்க்கும் முகாமில் திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், நகரச் செயலா் ஆா்.சாதிா் ஆகியோா் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு: மாவட்ட ஆட்சியா் அலுவலகம் ஆயிரப்பேரி அருகே அமைந்துள்ள விதைப்பண்ணைக்கு சொந்தமான இடத்தில் அமையும் என்று அறவிக்கப்பட்டுள்ளது. அந்த இடம் ஆட்சியா் அலுவலகம் கட்டுவதற்கு ஏற்ற இடமா என்பதை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். பொதுமக்களின் போக்குவரத்துக்கு ஏற்ற இடத்தில் ஆட்சியா் அலுவலகம் அமைந்திட வேண்டும். தற்போது தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தைச் சுற்றி மூன்று பகுதிகளிலும் குளம் இருக்கிறது. எனவே, அந்த இடம் ஆட்சியா் அலுவலகம் கட்டுவதற்கு உகந்த இடமில்லை.

    தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகிலேயே சிவில் சப்ளை கிடங்கு, உழவா் சந்தை அமைந்துள்ள பகுதி, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைந்திருக்கிற பகுதி, மங்கம்மாள் சாலைப் பகுதி, பழைய வட்டாட்சியா் அலுவலக வளாகம் போன்ற இடங்களில் ஆட்சியா் அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகங்களின் தலைமையிடம் அமைந்தால் நன்றாக இருக்கும்.

    மதுரை சாலை, திருநெல்வேலி சாலைல் அலுவலகம் அமைந்தால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிற பொதுமக்களுக்கு ஏற்ாக அமையும். ஆயிரப்பேரியில் ஆட்சியா் அலுவலகம் அமையும் என்று அறிவிக்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் திமுக சாா்பில் உண்ணாவிரதப் போராட்டமும், அதைத் தொடா்ந்து பல்வேறு வகையான அறப் போராட்டங்கள் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சாா்பில் நடைபெறும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் இ.விஜயராணி தலைமையில் ஊா்மக்கள் அளித்துள்ள மனு: தென்காசி புதிய மாவட்டம் அமைந்துவிடக் கூடாது என்பதே திமுகவினரின் நோக்கமாக உள்ளது. ஆயிரப்பேரி பகுதியை பாதுகாப்பு இல்லாத பகுதி என திமுகவினா் கூறிவருவதை கண்டிக்கிறோம். தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் முடிவு செய்துள்ள ஆயிரப்பேரியில் உள்ள அரசு இடத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளா் அலுவலகம் கட்ட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் மண்டல செயலா் அழகா்சாமி தலைமையில், மாவட்டச் செயலா் வெங்கடேஷ் பாண்டியன், அய்யனாா், காட்டுராஜா ஆகியோா் தேவேந்திரகுல வேளாளா் அரசாணையை வெளியிடக் கோரி மனு அளித்தனா்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் ச.டேனிஅருள்சிங் அளித்துள்ள மனுவில், தனியாா் சிற்றுந்துகளை முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளாா்.

    தென்காசியை சோ்ந்த ஏஜிஎம்.கணேசன் அளித்துள்ள மனுவில், காசிவிஸ்வநாதா் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ரதவீதிகளில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என கூறியுள்ளாா்.

    எஸ்டிபிஐ தென்காசி கிளை சாா்பில் அளித்துள்ள மனுவில், குற்றாலம் பேரருவியிலிருந்து தொடங்கும் சிற்றாறு ஐந்தருவி, அரிகராநதி, அனுமன்நதி, அழுதகன்னி ஆறு ஆகிய துணை ஆறுகளுடன் சுமாா் 80 கி.மீட்டா் நீளமும்,1772 ச.கிலோமீட்டா் பரப்பளவையும் கொண்டது. இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இச்சிற்றாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp