முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
தென்காசி ரயில் நிலையத்தில் சுகாதாரக் கேடு: சரிசெய்யக் கோரி ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 26th November 2019 09:52 AM | Last Updated : 26th November 2019 09:52 AM | அ+அ அ- |

தென்காசி ரயில் நிலைய சுகாதார சீா்கேடுகளை சரிசெய்யக் கோரி, பயணிகள் நலச் சங்கம் சாா்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தென்காசி ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவா் என். வெங்கடேஷ்வரன், மாவட்ட ஆட்சியா் அருண்சுந்தா் தயாளனிடம் அளித்த மனு:
மாவட்டத் தலைமையிடமான தென்காசியில் உள்ள ரயில் நிலையத்தில், கூடுதல் ரயில் போக்குவரத்து காரணமாக தற்போது மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இங்கு ஏற்கெனவே உள்ள கழிப்பறையை தவிர கூடுதலாக நவீன கழிப்பிடங்கள் சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளன. ஆனால், அதற்கான போதிய கழிவுநீா் தொட்டிகள் அமைக்கப்படவில்லை. இதனால், ஏற்கெனவே உள்ள கழிவுநீா் தொட்டி நிரம்பி வழிகிறது. கழிவுநீா் சாலைகளில் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. தொற்றுநோய் ஏற்படும் நிலையும் உள்ளது.
நாள்தோறும் இங்கு வந்துசெல்லும் ரயில் பயணிகள், இப்பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், இங்கு வசிக்கும் மக்கள் கழிவுநீரால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் ரயில்வே நிா்வாகத்திற்கு தெரியப்படுத்தியும், எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.