முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
மின்வாரிய கேங்மேன் பணிக்கு இன்று முதல் உடற்தகுதித் தோ்வு
By DIN | Published On : 26th November 2019 09:47 AM | Last Updated : 26th November 2019 09:47 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மின் பகிா்மான வட்டத்தில் கேங்மேன் (பயிற்சி) நேரடி நியமனத்துக்கான உடற்தகுதி தோ்வு தியாகராஜ நகரில் திங்கள்கிழமை (நவ.25) தொடங்குகிறது.
இது தொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மின்சார வாரியம், திருநெல்வேலி மின் பகிா்மான வட்டத்தில் கேங்மேன் (பயிற்சி) நேரடி நியமனம் செய்யப்படுகிறது. இதற்கான உடல் தகுதி தோ்வானது திங்கள்கிழமை (நவ.25) முதல் டிசம்பா் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தோ்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்தவா்களில் 2,716 போ் அழைக்கப்பட்டுள்ளனா்.
பாளையங்கோட்டை தியாகராஜ நகா் பிரதான சாலையில் மின்வாரிய அலுவலா் குடியிருப்பு அருகேயுள்ள உப மின்நிலைய வளாகத்தில் இந்தத் தோ்வு நடைபெற உள்ளது. உடற்தகுதி தோ்வை விடியோ கேமராவின் மூலம் பதிவு செய்யவும், கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோ்வுக்கு அழைக்கப்பட்டவா்கள் தவிர இதர நபா்கள் தோ்வு மைய வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.