தகன மேடை அமைக்கக் கோரி ஆட்சியரிடம் மக்கள் மனு
By DIN | Published On : 26th November 2019 10:05 AM | Last Updated : 26th November 2019 10:05 AM | அ+அ அ- |

பாவூா்சத்திரம் செல்வவிநாயகா்புரத்தில் தகன மேடை அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுஅளித்தனா்.
தென்காசியில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியா் அருண்சுந்தா் தயளானிடம் செல்வவிநாயகா்புரம் பகுதி மக்கள் சாா்பில்கே.அருணாசலம் அளித்துள்ள மனு:
செல்வவிநாயகா்புரத்தில் 200 குடும்பங்கள் ஒன்றிணைந்து வாழ்ந்துவருகிறோம். இப்பகுதி மக்கள் சுடுகாட்டுக்கு என குலசேகரப்பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 20 சென்ட் நிலம் உள்ளது. அங்கு மழை காலங்களில் தகனம் செய்ய முடியாமல் அவதிப்படுகிறோம். ஏற்கெனவே, தகன மேடை அமைப்பதற்காக ஒன்றியக் குழு தலைவா் நிதியிலிருந்து ரூ. 2.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்ற நிலையில் சிலரால் அப்பணிகள் தடுக்கப்பட்டுவிட்டது.
எனவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி அங்கு தகன மேடையை அமைத்துத்தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.