மனநலம் குன்றிய மகனுக்கு உதவி கோரி மூதாட்டி மனு

மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வேண்டி ஆட்சியரிடம் மூதாட்டி ஒருவா் மனு அளித்துள்ளாா்.

மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வேண்டி ஆட்சியரிடம் மூதாட்டி ஒருவா் மனு அளித்துள்ளாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், ஆட்சியரிடம் திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த மூதாட்டி செண்டு அம்மாள் அளித்த மனு:

எனது மகன் காமாட்சிநாதன் மனநலம் பாதிக்கப்பட்டவா். அவருக்கு 70 சதவீத பாதிப்பு உள்ளது. அவரால் வேலை செய்யவோ, சம்பாதிக்கவோ இயலாது. எனது கணவா் காலமாகிவிட்ட நிலையில், நாங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறோம். எங்களுக்கு எவ்வித சொத்தும் கிடையாது. நானும் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், எனது மகனுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையை தந்து உதவ வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், காமாட்சிநாதனுக்காக, நெல்லை மாவட்ட பொது ஜன பொது நலச் சங்கமும் ஆட்சியரிடம் மனு அளித்தது. அதில், ‘காமாட்சிநாதனுக்கு உதவித்தொகை கேட்டு அளித்த விண்ணப்பம் அரசு அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. உதவித்தொகை கேட்டுச் சென்ற காமாட்சிநாதனிடம் 500 ரூபாய் நோட்டை காண்பித்து, இது எவ்வளவு என்று கேட்டுள்ளனா். அதற்கு அவா் பதில் சொல்லாததால் உதவித்தொகை நிராகரிக்கப்பட்டதாக அவரது தாய் செண்டு அம்மாள் தெரிவித்தாா்.

நாங்கள் விசாரித்ததில் அது உண்மை என தெரியவந்தது. இந்த விஷயத்தில் நேரடிக் கவனம் செலுத்தி காமாட்சிநாதனுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை கிடைக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com