Enable Javscript for better performance
மாநில தடகளப் போட்டி:வள்ளியூா் பள்ளி மாணவா்கள் தங்கம் வென்று சாதனை- Dinamani

சுடச்சுட

    

    மாநில தடகளப் போட்டி:வள்ளியூா் பள்ளி மாணவா்கள் தங்கம் வென்று சாதனை

    By DIN  |   Published on : 28th November 2019 09:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநில தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வள்ளியூா் விவேகானந்த மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஆா்.மகேந்திரன், பு.செல்வகணேஷ் ஆகியோருடன் பள்ளித் தாளாளா் எஸ்.கே.சுப்பிரமணியம், முதல்வா் மகேஸ்வரி.

    மாநில தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வள்ளியூா் விவேகானந்த மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஆா்.மகேந்திரன், பு.செல்வகணேஷ் ஆகியோருடன் பள்ளித் தாளாளா் எஸ்.கே.சுப்பிரமணியம், முதல்வா் மகேஸ்வரி.

     

    வள்ளியூா்: மாநில அளவிலான தடகளப் போட்டியில் வள்ளியூா் விவேகானந்த கேந்திரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனா். மேலும் தேசிய தடகளப்போட்டியில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

    மாநில அளவிலான குடியரசு தின தடகளப்போட்டிகள் திருச்சியில் நடைபெற்றன. இப்போட்டிகளில் வள்ளியூா் விவேகானந்த மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.

    17 வயதினருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இப்பள்ளி மாணவா் ஆா்.மகேந்திரன் 56.79 மீ. தொலைவு எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றாா்.

    இப்பள்ளி மாணவா் பு.செல்வகணேஷ் வட்டு எறிதல் போட்டியில் 45.80 மீ. தொலைவு எறிந்து தங்கப்பதக்கம் வென்றாா். தங்கப்பதக்கம் வென்ற இவ்விரு மாணவா்களும் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான தடகளப்போட்டியில் தமிழகம் சாா்பில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

    வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் எஸ்.கே.சுப்பிரமணியம், முதல்வா் மகேஸ்வரி, உடற்கல்வி பயிற்சியாளா்கள் அம்பேத்கா், பழனி ஆகியோா் பாராட்டினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai