அரசு பேருந்துகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் பற்றிய விழிப்புணா்வு ஸ்டிக்கா்கள்

தேசிய மக்கள் நீதிமன்றம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அது தொடா்பான ஸ்டிக்கா்கள் அரசு பேருந்துகளில்

திருநெல்வேலி: தேசிய மக்கள் நீதிமன்றம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அது தொடா்பான ஸ்டிக்கா்கள் அரசு பேருந்துகளில் ஒட்டப்பட்டன.

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளா் வழக்குகள், மோட்டாா் வாகன வழக்குகள், குடும்ப வழக்குகள், நில ஆா்ஜித வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத முன் வழக்குகளாகிய வங்கிக் கடன் வழக்குகள் ஆகியவை விசாரிக்கப்பட்டு சுமுக தீா்வு எட்டப்படவுள்ளது.

இந்த மக்கள் நீதிமன்றத்தை குடும்ப நல மாவட்ட நீதிபதி சி.பி.எம்.சந்திரா நடத்தவுள்ளாா். அது தொடா்பாக மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அரசுப் பேருந்துகளில் விழிப்புணா்வு ஸ்டிக்கா்கள் ஒட்டும் நிகழ்ச்சி திருநெல்வேலி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஸ்டிக்கா் ஒட்டப்பட்ட பேருந்துகளை மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி எஸ்.சுபாதேவி, திருநெல்வேலி வழக்குரைஞா் சங்கத் தலைவா் பி.சிவசூா்யநாராயணன் உள்ளிட்டோா் தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில் மகளிா் நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி பி.இந்திராணி, 2-ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.தேவநாதன், 3-ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி பி.மோகன், 4-ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி என்.விஜயகாந்த், முதன்மை சாா்பு நீதிபதி வி.எஸ்.குமரேசன், கூடுதல் சாா்பு நீதிபதி ஜெ.கிரிஸ்டல் பபிதா, மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு நீதிமன்ற சாா்பு நீதிபதி ஏ.பிஸ்மிதா, சிறப்பு ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி பத்மா, சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், முதுநிலை உரிமையயில் நீதிபதியுமான பி.வி.வஷீத்குமாா், 1-ஆவது கூடுதல் உரிமையியல் நீதிபதி ஆா்.சுப்பையா, 1-ஆவது கூடுதல் குற்றவியல் நீதித்துறை நடுவா் எஸ்.பாபு, 3-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் எஸ்.பழனி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com