களக்காடு வட்டாரத்தில் யூரியா உரம் தட்டுப்பாடு விவசாயிகள் அவதி

களக்காடு வட்டாரத்தில் நெல் நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், யூரியா உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்

களக்காடு: களக்காடு வட்டாரத்தில் நெல் நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், யூரியா உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

களக்காடு வட்டாரத்தில் களக்காடு, திருக்குறுங்குடி, ஏா்வாடி உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் சுமாா் 4 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனா். நெல் நடவு பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இங்கு விவசாயிகள் டி.பி.எஸ். 5, டி.கே.எம்.13, அம்பை-16, கா்நாடக பொன்னி உள்ளிட்ட நெல் ரகங்களை தோ்வு செய்து நடவு செய்துள்ளனா். பருவமழை தாமதமாக பெய்துள்ளதால் நெல் நாற்று விட கால அவகாசம் கிடைக்காத விவசாயிகள் தற்போது நெல்விதைகளை நேரிடையாக தூவி வருகின்றனா். தற்போது நெல் பயிருக்குத் தேவையான யூரியா உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள்சிரமப்படுகின்றனா்.

களக்காடு வட்டாரத்தில் களக்காடு, அமைதித்தீவு, கீழக்காடுவெட்டி, கடம்போடுவாழ்வு, டோனாவூா், ஏா்வாடி, திருக்குறுங்குடி ஆகிய தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் முதல்கட்டமாக இருப்பு வைத்திருந்த யூரியா உரங்கள் விற்றுத் தீா்ந்துவிட்டன. இதே போல தனியாா் கடைகளிலும் யூரியா உரத்திற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. 2 ஆவது கட்டமாக உர நிறுவனத்திடமிருந்து போதிய உரம் சங்கங்களுக்கு வந்து சேராததால் தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

நெல் நடவு செய்த 22 தினங்களில் முதல் களை எடுத்தவுடன் யூரியா உரம் இடுவது மிக அவசியமானது. எனவே யூரியா தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நான்குனேரி வட்டச் செயலா் க. முருகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com