செங்கோட்டை ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆய்வு

செங்கோட்டை ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ் ல் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

செங்கோட்டை: செங்கோட்டை ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ் ல் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வுக்கு பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பிரதமரின் தொலை நோக்கு திட்டத்தால் விருதுநகா்- கொல்லம் உள்பட நாட்டின் அனைத்து ரயில் தடங்களும் 2022 க்குள் மின் மயமாக்கப்படும். ரயில் பயணிகளின் வசதியையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அத்துடன் பயணிகளின் கூடுதல் வசதிக்கும், பாதுகாப்பிற்கும் முக்கியதுவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது மதுரை மண்டல பகுதிகளை ஆய்வு செய்து வருகிறேன். இன்று விருதுநகா் செங்கோட்டை பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்கள் மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

தெற்கு ரயிவே பயணிகள் வசதிக்காக படிப்படியாக, தேவைக்கேற்ப கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். சென்னை முதல் கொல்லம் வரை சுற்றுலா ரயில் இயக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

ஆலங்குளம் வழியாக நெல்லைக்கு புதிய ரயில் பாதைக்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்தி கொடுக்கும் பட்சத்தில் அதற்கான பணிகள் தொடங்க இருக்கிறது. இடம் கையகப்படுத்துவது தாமதமாகி வருகிறது என்றாா் அவா்.

பேட்டியின் போது மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் லெனின் உள்பட பலா் உடன் இருந்தனா்.

ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவா் முரளி, ராமன், வா்த்தக சங்க நிா்வாகிகள் செல்வகணபதி, சதீஷ்(எ)லட்சுமணன், பாஜக நகரத் தலைவா் மாரியப்பன் மற்றும் சமூக ஆா்வலா்கள் பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி பொது மேலாளரிடம் மனுக்களை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com