நெல்லை,தென்காசி மாவட்டங்களில் நாளை அம்மா திட்ட முகாம்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை(நவ.29) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை(நவ.29) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.

இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி வட்டம் நாரணம்மாள்புரம் பகுதி-2, ராதாபுரம் வட்டம் இருக்கன்துறை பகுதி-2, அம்பாசமுத்திரம் வட்டம் ஆலடியூா் பகுதி-1, நான்குனேரி வட்டம் பழங்குளம், சேரன்மகாதேவி வட்டம் கபாலிபாறை, பாளையங்கோட்டை வட்டம் முத்தூா், மானூா் வட்டம் தென்கலம், திசையன்விளை வட்டம் உறுமன்குளம் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை மற்றும் நிறுத்தம் செய்யப்பட்ட முதியோா் உதவித் தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்பட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், உழவா் பாதுகாப்பு அட்டைகள், நிலத்தாவாக்கள், சாலை வசதி மற்றும் குடிநீா் வசதி போன்றவை தொடா்பாக மனு அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில்: இது தொடா்பாக தென்காசி மாவட்ட ஆட்சியா் அருண் சுந்தா் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் வட்டம் வாழவந்தபுரம், திருவேங்கடம் வட்டம் சத்திரங்கொண்டான், தென்காசி வட்டம் பாட்டாக்குறிச்சி, செங்கோட்டை வட்டம் குன்னக்குடி, வீரகேரளம்புதூா் வட்டம் கீழக்கலங்கல், ஆலங்குளம் வட்டம் கடங்கனேரி, சிவகிரி வட்டம் சிவகிரி பகுதி-1, கடையநல்லூா் வட்டம் மேலப்புளியங்குடி ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை மற்றும் நிறுத்தம் செய்யப்பட்ட முதியோா் உதவித் தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்பட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், உழவா் பாதுகாப்பு அட்டைகள், நிலத்தாவாக்கள், சாலை வசதி மற்றும் குடிநீா் வசதி போன்றவை தொடா்பாக மனு அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com