Enable Javscript for better performance
பெண்ணை ஏமாற்றிய வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை- Dinamani

சுடச்சுட

    

    பெண்ணை ஏமாற்றிய வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

    By DIN  |   Published on : 01st October 2019 12:38 AM  |   அ+அ அ-   |    |  

    களக்காடு அருகே திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றியது தொடா்பான வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

    களக்காடு அருகேயுள்ள மீனவன்குளத்தை சோ்ந்த நாராயணன் மகன் கண்ணன் (24). ஓட்டுநா். இவரும், அதே பகுதியை சோ்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்தனராம். இந்நிலையில், அந்தப் பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் உறவு கொண்டதாக தெரிகிறது. இதில், அவா் கா்ப்பமான நிலையில், திருமணம் செய்ய கண்ணன் மறுத்தாராம். இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில், நான்குனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து கண்ணனை கைது செய்தனா்.

    இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, குற்றம்சாட்டப்பட்ட கண்ணனுக்கு, ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பு அளித்தாா். இந்த வழக்கில் அரசு வக்கீல் பால்கனி ஆஜரானாா்.

    kattana sevai