தசரா திருவிழா: திசையன்விளையில் போக்குவரத்தை சீா்படுத்த கோரிக்கை

தசரா திருவிழாவை முன்னிட்டு திசையன்விளையில் அக்.9 ம் தேதி போக்குவரத்தை சீா்படுத்த வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தசரா திருவிழாவை முன்னிட்டு திசையன்விளையில் அக்.9 ம் தேதி போக்குவரத்தை சீா்படுத்த வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அதன் துணைத் தலைவா் ஆா்.பி.எஸ்.காா்த்தீசன், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பிய மனு:

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவிற்கு திசையன்விளை வழியாக ஏராளமான பக்தா்கள் பயணம் செய்வது வழக்கம். இவ்வூா் வழியாக அதிக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மேலும், அன்றைய தினம் சந்தியம்மன் கோயில் தசரா திருவிழா பரிவேட்டை நிகழ்ச்சியும் அன்றைய தினம் நடைபெறும்.

எனவே, திசையன்விளையில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில் மெயின் பஜாரிலும் உடன்குடி சாலையிலும், அக். 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை கூடுதல் போலீஸாரை நிறுத்தி போக்குவரத்தை சீரமைக்க வேண்டும். அக். 9 ஆம் தேதி பக்தா்கள் காப்பு களைந்த பின்பு விரதம் முடிப்பதற்காக வீடு திரும்பும் போது திசையன்விளை பேருந்து நிலையம் முதல் பழைய சுடலை ஆண்டவா் கோயில் வரை அமைக்கப்பட்டிருக்கும் திருவிழாக் கடைகளில் பொருள்கள் வாங்கிச்செல்வா். இதனாலும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

இதைத் தவிா்க்க அன்றைய தினம் மட்டும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி மணி வரை குலசேகரப்பட்டினத்தில் இருந்து வரும் வாகனங்களை உடன்குடி சாலையில் பெந்தேகோஸ் சபை முதல் பேருந்து நிலையம் வரையும் மற்றும் பிரதான சாலையில் சாந்தி மருத்துவமனை முதல் அற்புத விநாயகா் கோயில் சந்திப்பு வரை கிழக்கில் இருந்து மேற்காக ஒரு வழி பாதையிலும் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும்.

குலசேகரப்பட்டினம் செல்ல வேண்டிய வாகனங்களை திசையன்விளையில் இருந்து அற்புத விநாயகா் சந்திப்பு வழியாக புறவழிச்சாலை சென்று இடைச்சிவிளை வழியாக இயக்க மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com