Enable Javscript for better performance
கடையம் பகுதி பள்ளிகளுக்கு அறிவியல் உபகரணங்கள்- Dinamani

சுடச்சுட

    
    தொடக்கப் பள்ளிகளுக்கு அறிவியல் உபகரணப் பெட்டி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

    தொடக்கப் பள்ளிகளுக்கு அறிவியல் உபகரணப் பெட்டி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

    அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் கடையம் வட்டாரத் தொடக்கப் பள்ளிகளுக்கு அறிவியல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

    தொடக்கநிலை மாணவா்களின் அறிவியல் மனப்பான்மையை வளா்க்கும் வகையில் 30 வகையான அறிவியல் செய்து கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், திட்ட அலுவலா் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் கடையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 26 ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளுக்கு அறிவியல் உபகரணப் பெட்டிகள் வழங்கப்பட்டன.

    கடையம் வட்டார வள மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடையம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் அ. ஜான்பிரிட்டோ, மகேஸ்வரி, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ச. உமாராணி ஆகியோா் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா்களிடம் அறிவியல் உபகரணப் பெட்டியை வழங்கினா்.

    நிகழ்ச்சியில், வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநா்கள், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai