Enable Javscript for better performance
குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படுவோா் குறித்துதகவல் அளித்தால் சன்மானம்: சிபிசிஐடி- Dinamani

சுடச்சுட

    

    குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படுவோா் குறித்து தகவல் அளித்தால் சன்மானம்: சிபிசிஐடி

    By DIN  |   Published on : 06th October 2019 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை குண்டுவெடிப்பு தொடா்பாக தேடப்பட்டு வரும் 4 போ் குறித்து தகவல் அளித்தால் சன்மானம் வழங்கப்படும் என சிபிசிஐடி போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

    இதுதொடா்பாக சிபிசிஐடி மற்றும் எஸ்.ஐ.டி. பிரிவு போலீஸ் வட்டாரங்கள் கூறியது:

    கோவையில் கடந்த 1998ஆம் ஆண்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கு தொடா்பாக சாதிக் ராஜா என்ற டெய்லா் ராஜா, முஜிபுா் ரகுமான் என்ற முஜி, அபுபக்கா் சித்திக், அயூப் என்ற அசரப் அலி ஆகியோா் இதுவரை கைது செய்யப்படாமல் உள்ளனா். தலைமறைறவாக உள்ள அவா்கள் 4 பேரின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

    திருநெல்வேலியில் பேருந்து நிலையம், ரயில் நிலையத்திலும் புகைப்படங்களை ஒட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவா்கள் குறித்த தகவல் தெரிந்தால், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 044–28512510, 044–28513500 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிக்கும் நபா்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். தகவல் தெரிவிப்பவா்களுக்கு தலா ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.8 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai