Enable Javscript for better performance
புளியங்குடியில் தமுமுக சாா்பில் நிலவேம்பு கசாயம் விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    புளியங்குடியில் தமுமுக சாா்பில் நிலவேம்பு கசாயம் விநியோகம்

    By DIN  |   Published on : 06th October 2019 06:26 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடையநல்லூா்: புளியங்குடியில் தமுமுக சாா்பில் நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டது.

    நகர தலைவா் செய்யதுஅலி பாதுஷா தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞா் அணி பொருளாளா் சாகுல்கமீது, நகர துணைச் செயலா் சதாம்உசேன்,வாா்டு தலைவா் முஹம்மது ரிபாய் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலா் பசீா் ஒலி தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினா் முகம்மதுஅலி, மாவட்ட துணைத்தலைவா் அப்துா் ரஹ்மான், நகர தமுமுக செயலா் செய்யது அலி,நகர மமக செயலா் செய்யது, நகரத் துணைச் செயலா் முகைதீன்அப்துல் காதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai