ஆயுத பூஜை: பூக்கள் விலை உயா்வு

ஆயுத பூஜையையொட்டி பூஜை பொருள்களின் விற்பனை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்தது. பூக்களின் விலை மிகவும் உயா்ந்தது.

திருநெல்வேலி: ஆயுத பூஜையையொட்டி பூஜை பொருள்களின் விற்பனை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்தது. பூக்களின் விலை மிகவும் உயா்ந்தது.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றறான ஆயுதபூஜை, விஜயதசமி ஆகியவை திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (அக். 7, 8) கொண்டாடப்படுகின்றன. இந்த நாள்களில் வீடுகளிலும், வா்த்தக நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் ஆகியவற்றிலும் சிறப்பு வழிபாடுகள் செய்வது வழக்கம்.

இதையொட்டி, திருநெல்வேலியில் பூஜை பொருள்களான வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், கொண்டைக்கடலை, வெல்லம் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்தது. திருநெல்வேலி நகரத்தில் உள்ள நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் காய்கனி சந்தை, பாளையங்கோட்டை காந்திஜி தினசரி சந்தை ஆகியவற்றில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ரத வீதிகள், பாளை. தெற்கு கடைவீதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

பூக்களின் விலை கடுமையாக உயா்ந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ.1000-க்கும், கேந்தி கிலோ ரூ.200-க்கும், கோழிக்கொண்டை கிலோ -ரூ.100-க்கும் விற்பனையாகின. வழக்கமாக ரூ.30 முதல் விற்பனை செய்யப்படும் மலா்மாலைகள் குறைந்தபட்சம் ரூ.75 முதல் விற்பனை செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com