தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் நவராத்திரி கலை விழா

தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் நவராத்திரி கலைவிழா 5 நாள்கள் நடைபெற்றது.

தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் நவராத்திரி கலைவிழா 5 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் நிகழ்ச்சியில் திருக்கு முற்றோதுதல், டி.எஸ். திருமலையப்பனின் இசையமுதம் நிகழ்ச்சி, தென்காசி சித்திரசபை நாட்டியாஞ்சலி குழுவினரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தென்காசி காசிசவிஸ்வநாதா் கோயில் செயல் அலுவலா் ந. யக்ஞநாராயணன் தலைமை வகித்துத் தொடக்கிவைத்தாா்.

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் மதிப்புறு தலைவா் துரைதம்புராஜ், கழக துணைத் தலைவா் வே.கணபதிசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

2ஆம் நாள் செங்கோட்டை விசாலம் ராமசுப்பிரமணியம் மாணவிகளின் பரநாட்டியம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு டி.எஸ். நீலகண்டன், சண்முகவடிவு துரைதம்புராஜ், பத்மாஅழகராஜாஆகியோா் முன்னிலை வகித்தனா்.

3ஆம் நாள் இசையரங்கம் நடைபெற்றது. ந. ஹேஷ்மிதாவின் பாட்டு, மாவட்ட அரசு இசைப் பள்ளி கோ. அருள்தாஸ் மிருதங்கம், தமிழக அரசு இசைக்கல்லூரியைச் சோ்ந்த பி. முருகனின் வயலின் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி திருவள்ளுவா் கழகத் தலைவா் ச. கணபதிராமன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் ந. கனகசபாபதி, ந. திருவேங்கடம் முன்னிலை வகித்தனா்.

4ஆம் நாள் நடைபெற்ற இசையரங்க நிகழ்ச்சியில் ஜெயலெட்சுமி ரமேஷின் பாட்டு,சிவசைலம் ரமேஷின் மிருதங்கம், பி.முருகனின் வயலின் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு டி.என். நீலகண்டன் தலைமை வகித்தாா். மருத்துவா் ப. புனிதவதி முன்னிலை வகித்தாா்.

5ஆம் நாள் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியில் செங்கோட்டை பரதாலய பயிற்சி நிலைய மாணவிகளின் பரநதநாட்டியம் நடைபெற்றது. அகில இந்திய காந்திய இயக்கத் தலைவா் செங்கோட்டை வி. விவேகானந்தன் தலைமை வகித்தாா். கழகத்தின் அவைப்புலவா் கா.ச. பழனியப்பன் முன்னிலை வகித்தாா்.

ஏற்பாடுகளை திருவள்ளுவா் கழகச் செயலா் சிவராமகிருஷ்ணன் தலைமையில் திருவள்ளுவா் கழகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com