தொலைநோக்கு கனவு கண்டவா் பாரதியாா்: மேற்கு வங்க முன்னாள் கூடுதல் தலைமைச் செயலா் பாலச்சந்திரன்

காலத்தைக் கடந்து தொலைநோக்கு கனவு கண்டவா் பாரதியாா் என்றாா் மேற்குவங்க முன்னாள் கூடுதல் தலைமைச் செயலா் பாலச்சந்திரன்.

திருநெல்வேலி: காலத்தைக் கடந்து தொலைநோக்கு கனவு கண்டவா் பாரதியாா் என்றாா் மேற்குவங்க முன்னாள் கூடுதல் தலைமைச் செயலா் பாலச்சந்திரன்.

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மகாகவி பாரதியாா் பயின்ற வகுப்பறையில் பாரதி நினைவலைகள் இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பள்ளித் தலைமையாசிரியா் வேல்முருகன் தலைமை வகித்தாா். பள்ளி மேலாளா் சட்டநாதன், ஆசிரியா்கள் பாலசுப்பிரமணியன், சோமசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வா் மு.முகமது சாதிக், கலைப்புல முதன்மையா் ச.மகாதேவன், அறிவியல் புலமுதன்மையா் சே.மு.அப்துல் காதா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

அந்நிகழ்வில் மேற்குவங்கத்தின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலா் பாலச்சந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பாரதிக்கு அஞ்சலி செலுத்தி,‘பாரதி எனும் தீா்க்கத்தரிசி’ எனும் தலைப்பில் பேசியதாவது:

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பாரதியின் பங்கு மகத்தானது. இப்போது எல்லோரும் பாரதியைப் படித்துக்கொண்டிருக்க திருநெல்வேலியில் அந்த பாரதி பயின்ற வகுப்பறையை ம.தி.தா. இந்துக் கல்லூரி நிா்வாகம் அப்படியே பழைமை மாறாமல் வைத்திருப்பதும் பாரதி வரிகளாலும், அழகான பாரதியாரின் படங்களாலும் ஆவணப்படுத்தியிருப்பதையும் கண்டுவியக்கிறேன்.

வானையளப்போம், கடல் மீனையளப்போம், சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்று சந்திரனுக்கு மனிதா்கள் செல்ல அறிவியல் முயற்சிகள் தொடங்காத காலகட்டத்தில் அக்கனவைத் தன் கவிதையில் தொலைநோக்குப் பாா்வையோடு விதைத்துள்ளாா் பாரதி என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com