முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
அருணாசலபுரம் கோயிலில் புரட்டாசித் திருவிழா
By DIN | Published On : 07th October 2019 05:29 AM | Last Updated : 07th October 2019 05:29 AM | அ+அ அ- |

சோ்ந்தமரம் அருகேயுள்ள அருணாசலபுரம் ஸ்ரீ கிருஷ்ணசாமி கோயிலில் புரட்டாசித் திருவிழா நடைபெற்றது.
புரட்டாசி முதல் சனிக்கிழமை தொடங்கிய இந்த திருவிழாவையொட்டி, தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜையும், கோயில் கலையரங்கில் பல்சுவை நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக 3-ஆவது சனிக்கிழமை இரவு மூலவருக்கு தமிழகத்தின் புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதையடுத்து, மலா்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் உற்சவா் ஸ்ரீ கிருஷ்ணா் எழுந்தருள திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.