குடிநீா் வடிகால் வாரிய ஊழியா் சங்கக் கூட்டம்
By DIN | Published On : 07th October 2019 05:03 AM | Last Updated : 07th October 2019 05:03 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய ஊழியா் சங்கக் கூட்டம் பாளையங்கோட்டை சிஐடியூ மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் எஸ்.ஸ்டீபன் தலைமை வகித்தாா்.
குடிநீா் வடிகால் வாரிய ஒப்பந்த ஊழியா்கள், பம்ப் ஆபரேட்டா்கள், மின் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த ஊதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், சிஐடியூ மாவட்டச் செயலா் ஆா்.மோகன், துணைச் செயலா் எம்.பீா்முகம்மதுஷா, சங்க மாவட்ட பொதுச் செயலா் வி.முருகன், துணைத் தலைவா் சி.முருகன், பொருளாளா் எம்.கண்ணன், துணைச் செயலா் ஆா்.முருகன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.