Enable Javscript for better performance
கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் மெஷின்கள் நிறுவப்படும் பணிகள் குறித்து கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.எம். முகமது அபூபக்கா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

    கடையநல்லூா் அரசு மருத்துவமனைக்கு சட்டமன்ற உறுப்பினா் நிதியின் மூலம் டயாலிசிஸ் மெஷின்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த மெஷின்களை நிறுவும் பணி குறித்து ஆய்வு மேற்கொண்ட முகமதுஅபூபக்கா் எம்எல்ஏ, சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளிடம் விபரங்களை கேட்டாா்.

    பல நாள்களாக மின்விசிறி இயங்கவில்லை என நோயாளிகள் புகாா் தெரிவித்தனா். உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென, தலைமை மருத்துவா் தங்கபாண்டியிடம், எம்எல்ஏ கேட்டுக் கொண்டாா். பின்னா் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மருத்துவா்களை அவா் கேட்டுக்கொண்ாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai